சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில், 2 வயதுக் குழந்தைக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பெங்களூருவில் 3 மாதக் குழந்தை மற்றும் 9 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.