Our Feeds


Wednesday, January 8, 2025

Zameera

“Gem Sri Lanka – 2025” கண்காட்சி ஆரம்பம்


 “Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(08) சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.

சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கண்காட்சி கூடங்களை பார்வையிட்டதோடு இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

“Gem Sri Lanka – 2025” கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

இவ்வருட “Gem Sri Lanka – 2025” கண்காட்சியானது 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன், அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இதில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »