அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள
"Clean sri lanka" வேலைத்திட்டத்தின் கீழ், தேவையில்லாமல் பஸ்களை நிறுத்தி பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்து துன்புறுத்துவதற்கு எதிராக பாரிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தனியார் பஸ் சாரதிகள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.பொலிஸாரின் முறையற்ற தலையீடு தொடர்பில் எதிர்வரும் இரண்டு தினங்களில் பொலிஸ் மா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கு இடமளிக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சாரதிகள் சங்க பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.கெமுனு விஜேரத்னவிடம் கேட்டபோது, சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டால் அதனை நிறுத்த முடியாது என தெரிவித்தார்.
பேரூந்துகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களை அகற்றுவது மற்றும் பல விடயங்கள் தொடர்பில் பொலிஸாரின் முறையற்ற தலையீடுகளால் பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்
எவ்வாறாயினும், பொலிஸாரின் முறையற்ற தலையீடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி நிலையான தீர்வு கிடைக்காவிடின் பேரூந்து உரிமையாளர் சங்கமும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். வேலை நிறுத்தத்தைத் தவிர வேறு வழியில்லை.