Our Feeds


Wednesday, January 1, 2025

Zameera

Clean Sri Lanka இன்று ஆரம்பம்



 நாட்டை தூய்மைப்படுத்தும் Clean Sri Lanka வேலைத்திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான டொக்டர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று  (31) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.


இவ்வேலைத்திட்டம் சுற்றாடல்சார் மாத்திரமன்று சமூக ஒழுக்கவிழுமியங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டை தூய்மைப்படுத்தி விருப்பத்திற்குறிய நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டமாகும் என அமைவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »