அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில்
தூய்மை இலங்கை நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா, அஸ்ரப் தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை இலங்கை திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பொறுப்பாளர் ஷம்சுல் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.ஆரிப்பின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.ஆரிப் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கட்சி தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன், தூய்மை இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெளிவான விளக்கமளித்தார்.
இறுதியாக, விருந்தினர்கள் பாதைகள் மற்றும் காலியிடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியையும் துவக்கி வைத்தனர்.