Our Feeds


Thursday, January 9, 2025

SHAHNI RAMEES

BREAKING: இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை!


 இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற இல.03 இல் கௌரவ

நீதவான் இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் கீழ் 291B சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாக காணப்பட்டார்.


குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரரின் சட்டத்தரணிகள், மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனையை வழங்குமாறு மன்றாடினர்.


கடந்த 2016ஆம் ஆண்டு சந்தேகநபர் “இஸ்லாம் ஒரு புற்று நோய், அதை அவர் துடைத்தெறிவார்” என்று மேற்கோள் காட்டி வெறுப்புணர்வை ஏற்படுத்திய உரையின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த அறிக்கையைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.


கிருலப்பனை பொலிஸாரால் நீண்ட கால விசாரணையின் பின்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


மூத்த சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் முதலாவது முறைப்பாட்டாளரின் நலன்கள் கவனிக்கப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »