சிரிய நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக
அகமது அல்ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைத் துறைச் செய்தித் தொடர்பாளர் கேணல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார்.நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்றக் குழுவை அமைக்க அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.