மேற்கு அமெரிக்காவின் சான் டியாகோவின் புறநகர்ப் பகுதியில் சக்திவாய்ந்த காட்டுத் தீ பரவி வருகிறது.
லிலாக் (Lilac) என்று பெயரிடப்பட்ட இந்த காட்டுத் தீயால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, இது கிட்டத்தட்ட 85 ஏக்கர் பரப்பளவை எரித்துள்ளது.
காட்டுத் தீ காரணமாக, பல வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.