Our Feeds


Thursday, January 9, 2025

Sri Lanka

இரண்டு தசாப்தங்களின் பின் முதல் தடவையாக, சர்வதேச பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பம்.



இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன் முதலில் நடைபெற உள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி  கொழும்பில் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.


2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது.


கொழும்பில் ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம்.


யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபத்தில் இம்மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும், காலியில் மாநகர சபையில் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.


இலங்கையில் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு புதன்கிழமை (08) கொழும்பிலுள்ள சினமன் லைப் ஹோட்டலில் நடைபெற்றது.


ஊடக சந்திப்பில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் மற்றும் சினமன் லைப் ஹோட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் ரதிஷா தளுவத்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »