மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கைதி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்த வைத்தியசாலை பேச்சாளர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் சில கைதிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆண் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வைத்தியசாலை பேச்சாளர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் ஆண் கைதிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை சிறைச்சாலையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் மீது நேற்று (01) இரவு 10.00 மணியளவில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதுடன், படுகாயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.