உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் எனப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, மின்சாரக் கட்டணக் குறைப்பை விரைவில் முன்னெடுக்க முடியாது என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
Friday, January 10, 2025
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான கருத்து சேகரிப்பு இன்றுடன் நிறைவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »