Our Feeds


Sunday, January 19, 2025

SHAHNI RAMEES

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது!

 


முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.


சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனத்தை ஒன்று சேர்த்ததோடு, அதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதற்கமைய, கைது செய்யப்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா நாளை (20) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இதே போன்று சட்டவிரோதமான முறையில் வேறு வாகனங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பில் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், இன்று (19) வாக்குமூலம் வழங்குவதற்காக வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடம் சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »