உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.
அதன்படி, தற்போது ஏழு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளது.
அதனை தேவையான மட்டத்தில் பேணுமாறு குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பணிப்புரைக்கு அமைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.
அதன்படி, மூன்று வான் கதவுகள் தலா ஒரு மீற்றர் அளவிலும், ஏனைய 3 வான் கதவுகள் தலா 0.5 மீற்றர் அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், நீர்த்தேக்கத்தின் தாழ்நில பகுதியில் உள்ள ரத்கிந்த - கிராந்துருகோட்டே வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாற்றமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த இரண்டு வான் கதவுகள் வழியாக, வினாடிக்கு 1,200 கன அடி கொள்ளளவு தண்ணீர் கலா ஓயாவிற்கு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sunday, January 12, 2025
ரத்கிந்த மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »