முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் 3 ஆம் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது.
சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மற்றும் மூன்று பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். எஸ்.எஸ் சபுவிதவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.