Our Feeds


Tuesday, January 14, 2025

SHAHNI RAMEES

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்!

 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் ஜந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு என்பவற்றுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். .



அதன்படி, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக  நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பதில் அமைச்சராக வைத்தியர் பிரசன்ன குமார குணசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »