Our Feeds


Wednesday, January 22, 2025

Zameera

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு


 நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை "அர்ச்சுனா லோச்சன்" என்று பெயரிட்டனர்.


ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, சரியான சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »