Our Feeds


Friday, January 17, 2025

Sri Lanka

எலான் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.



ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப்  ( gulf of) மெக்சிக்கோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன. விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பை  இழந்தது.


“ஸ்டார்ஷிப் ரொக்கெட் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம்” –  என்று ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனத்தின் தகவல் தொடர்பு  முகாமையாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.


ஃபிளைட் ரேடார் 24  (Flightradar24 ) தளத்தின் பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத்  திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது ராக்கட் பாகங்கள் விழுவதை தவிர்க்கவே பாதை மாற்றியமைக்கப்பட்டன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »