Our Feeds


Sunday, January 26, 2025

Zameera

சட்டவிரோத மீன்பிடியை தடுத்தால் ஏற்றுமதி சாத்தியம்


 சட்டவிரோத மீன்பிடியை தடுத்து நிறுத்தினால் மீ்ன்களை ஏற்றுமதி செய்யலாம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். 


அறிக்கை ஒன்றின் மூலம் குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியின் ஊடக அறிக்கையில் இலங்கையின் பொருளாதார சரிவில் எதிர்காலத்தில் மீன்களும் இறக்குமதி செய்கின்ற நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார் அத்துடன் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் தரத்திலும் குறைபாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



நாட்டின் மீன்பிடித் துறைகளில் அதிக மீன்கள் உற்பத்தியாகும் கடற்பகுதியாக வடக்கு கடற்பகுதியே காணப்படுகிறது அப் பகுதியில் நடைபெறும் தென்னிந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியை தடுத்து வடக்கு மீனவர்கள் சட்டப்படி சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதை அரசாங்கம் உறுதி செய்யுமாக இருந்தால் உள் நாட்டிற்கு தேவையான மீன் உணவையும் ஏற்றுமதி செய்வதற்கான மீன்களையும் வடக்கு மீனவர்களால் ஏற்படுத்த முடியும் இதற்கு அநுர அரசாங்கம் தயாரா? அமைச்சர்கள் பொருளாதாரம் சரிகிறது என மக்களை அச்சுறுத்துவதை தவிர்த்து நடைமுறைச் செயற்பாடுகளில் இறங்குங்கள்.



சட்டவிரோத மீன்பிடி முறையை தென்னிந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் வட கடலில் உள்ள சிறிய மீன் இனங்கள் மற்றும் மீன் உற்பத்தியாகும் சூழல் என்பன முற்றாக அழிக்கப்படுகிறது இதனால் பெறுமதியான கடல் வளம் சூறையாடப்படுகிறது இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தும் செயற்பாட்டிற்கு இறங்க வேண்டும் இதன் மூலம் வடக்கில் மீன்படி துறையில் ஏற்படும் மாற்றம் நாட்டின் பொருளாதார உயர்ச்சியிலும் வலுச் சேர்க்கும் என குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »