நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும் நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இதன் விளைவாக ஒரு கிலோ நெல்லின் விலை 110 முதல் 120 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.
உத்தரவாத விலையை நிர்ணயிக்காததுடன் அரசாங்கம் இன்னும் நெல் கொள்முதல் செய்யும் செயல்முறையை தொடங்கவில்லை என்றும் எனவே நெல்லுக்கு உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விமல் வட்டுஹேவா தெரிவித்தார்.
திருகோணமலைப் பகுதியில் அறுவடையின்பின்னர் தற்போது சந்தைக்கு வந்திருப்பதாகவும் அதன்படி, சிவப்பு நெல் ஒரு கிலோ 110 முதல் 120 ரூபா வரையிலும் மற்ற வகை நெல் 110 முதல் 115 ரூபா வரையிலும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Friday, January 24, 2025
அரசாங்கம் இன்னும் நெல் கொள்முதல் செய்யும் செயல்முறையை தொடங்கவில்லை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »