Our Feeds


Thursday, January 2, 2025

SHAHNI RAMEES

கடவுச்சீட்டு வரிசை மேலும் நீடிக்கலாம்!

 


நாட்டில் கடவுசீட்டை பெற்றுக்கொள்வதற்காக மக்கள்

நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை  மேலும் நீடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


ஆண்டின் முதல் பாதிக்கு மட்டுமே போதிய கையிருப்பு இருப்பதாகவும், புதிய கடவுச்சீட்டு நகல்களைப் பெறுவதற்கு விலை மனு கோருவதற்கு  அரசாங்கத்திடம் நிதி இல்லாமல் இருப்பதும்  கடவுச்சீட்டு நெருக்கடி  மேலும் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


முன்னைய அரசாங்கம் இலத்திரனியல் கடவுச்சீட்டை (ePassports) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தது.


ஆனால் Thales DIS Finland OY மற்றும் அதன் இலங்கைப் பங்காளியான Just In Time (JIT) Technologies (Pvt) Ltd-க்கு வழங்கப்பட்ட விலை மனு கோரலை ஏலம் எடுத்த எபிக் லங்கா (பிரைவேட்) சரியாக செயல்படுத்தாமையினால் வழங்கு தொடரப்பட்டுள்ளது.


ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில்,  இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவடைவதற்குள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக பி-சீரிஸின் புதிய கடவுச்சீட்டுகளை பாதுகாக்க அரசாங்கம் விண்ணப்பங்களை கோருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


வழங்கு தொடரப்பட்டுள்ள நிறுவனத்திடம் புதிய விலைமனு கோரலை வழங்கலாமா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். அதை ஆய்வு செய்வதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்காக காத்திருக்கிறோம். இதில் பல்வேறு பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், நீதிமன்ற வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.


கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து அதிகளவானோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »