நாட்டில் இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும், கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.