Our Feeds


Saturday, January 4, 2025

SHAHNI RAMEES

பாராளுமன்ற உயர் பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகள் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு


 பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கு வெளியில் இ

ருந்து அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தையில் இருந்து பாராளுமன்ற ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக பாராளும்ன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொதுவாக, தற்போது வரை, தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கே அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.


வெளியில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாரிய அநீதி இழைப்பதாக பலரும் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுகின்றனர்.


இவர்கள் அரச நிர்வாக சேவை மூலம் பாராளுமன்ற உயர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


அண்மையில், பாராளுமன்ற உயர் அதிகாரிகளின் கலந்துரையாடலில் இவ்விடயம் விரிவாகப் பேசப்பட்டது.


இதேவேளை, பொருளாதார பிரச்சினை காரணமாக பாராளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை நட்டஈடு கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாகவும் ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »