Our Feeds


Thursday, January 9, 2025

Sri Lanka

அமெரிக்கத் தூதுவரை நேரில் சந்தித்த தமிழரசுக் கட்சியின் எம்.பி க்கள் - பேசப்பட்ட முக்கிய விவகாரம்.

 


சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) மாலை கொழும்பில் நடைபெற்றுள்ளது.


இந்தச் சந்திப்பின்போது, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வுக்கான சாத்தியமின்மைகள் எழும்போது அது சார்ந்த அரசியல் நகர்வுகளின் தேவைப்பாடு மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


அமெரிக்கத் தூதுவருடனான இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a) 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »