முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25) காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கைது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 03 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Saturday, January 25, 2025
யோஷித ராஜபக்ஷ கைது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »