சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் அமைப்பு கடந்த 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.
இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்சில் நாட்டில் உள்ள லியான்ஸ் நகரில் அமைந்துள்ளது.
இந்நிலையில், உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில், பதுக்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இன்டர்போல் அமைப்பு 'சில்வர்' நோட்டீஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
மாபியா கும்பலை சேர்ந்த ஒருவர் சொத்து விவரங்களை கேட்டு இத்தாலி நாட்டிற்கு முதல் சில்வர் நோட்டிஸை இன்டர்போல் வழங்கியுள்ளது.
சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன