ஈரநெல்லை 95 ரூபாவிற்கும் உலர் நெல்லை 110 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யுமாறு சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட விவசாய கூட்டுமைப்பின் அமைப்பாளர் தெரிவிக்கின்றார்.
இன்றைய அரசாங்கம் நெற்பயிர் உற்பத்தியை பாதிவிலைக்கு கொள்வனவு செய்து விவசாயியை இல்லாமல் செய்ய விரும்புவதாக அதன் தலைவர் திரு.புஞ்சிரால ரத்நாயக்க சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் இந்த கொள்வனவை அரசாங்கம் முற்றாக கைவிட்டுள்ளதாகவும், இது ஏதோ ஒரு குழுவின் பேரம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோ நெல்லுக்கு 154 ரூபா வழங்க வேண்டும் என கோஷமிட்ட தற்போதைய விவசாய பிரதியமைச்சர் திரு.நாமல் கருணாரத்ன இன்று 140 ரூபா கொடுக்க முடியாது என விவசாயி மீது குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
நெல்லுக்கு நியாயமான விலை கொடுக்காவிடில் கோதபாய இருந்த காலத்தைப் போல் வீதிகள் நிரம்பி வழியும். இதில் கவனமாக இருங்கள் என செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்ப்பிட்டார்.
Sunday, January 26, 2025
நெல்லுக்கு நியாயமான விலை கொடுக்காவிடில் வீதிக்கு இறங்குவோம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »