கொள்கலன் பிரச்சினை தொடர்ந்தும் நீடிப்பதாகக் கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
இதன்படி, துறைமுகத்துக்கு வெளியே சுமார் 400 கொள்கலன்களும் துறைமுகத்துக்கு உள்ளே சுமார் 600 கொள்கலன்களும் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 3,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளதாகவும் கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களைத் துறைமுகத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்ந்தும் உள்ளது.
பரிசோதனைகளுக்காகத் துறைமுக வளாகத்திற்கு வெளியே சுமார் 400 கொள்கலன் ஊர்திகள் தரிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், துறைமுகத்திற்குள் சுமார் 600 கொள்கலன் ஊர்திகள் காணப்படுகின்றன.
அத்துடன், சுங்க அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வில்லை எனவும் கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தாங்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாகக் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகளும் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு நாட்களுக்கு மேல் தங்களது வாகனங்களிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Saturday, January 25, 2025
தொடரும் கொள்கலன் பிரச்சினை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »