ஊழல் மற்றும் மோசடி குற்றவியல் பைல்கள் தொடர்பான விசாரணைகளின் பெறுபேறுகள் பெப்ரவரி – மார்ச் மாதத்திற்குள் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன இவற்றை வலுவாகச் செய்யும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாங்கள் அரசியல் தலைமைகள் அவர்களை (இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம்) தடுக்காமல் பாதுகாப்பையும், உட்கட்டமைப்பு வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
பழைய குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சில சாட்சிகள் உயிரிழந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
குற்றச் செயல்கள் மற்றும் நிதிக் குற்றச் செயல்களை கையாள்வதற்காக பல பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தை குறுகிய காலத்தில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் கீழ் புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
Sunday, January 26, 2025
பழைய குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »