பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கை எழுந்துள்ளது.இனி ஒருபோதும் இந்த நாட்டில் நெருக்கடி நிலைமை ஏற்படாது. மீண்டும் வங்குரோத்து அடையாதவாறு நாட்டின் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கை எழுந்துள்ளது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளோம்.கடந்த டிசம்பர் மாதம் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டெழுந்தது.
ஊழல் மோசடி காரணமாக ஜப்பான் நாட்டின் 11 திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த திட்டங்களை மீள ஆரம்பிப்தற்கு தீர்மானித்துள்ளது.சீனாவுக்கு சென்று நாம் பல விடங்களை கலந்துரையாடினோம்.
ஏற்கனவே ஆரம்பித்த மற்றும் புதிய 76 திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாடு மீண்டும் வங்குரோத்து அடையாதவாறு நாட்டின் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்புவோம்.இனியும் ஒருபோதும் இந்த நாட்டில் நெருக்கடி நிலைமை ஏற்படாது.
குறிப்பாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் கலாசாரம் பிரதான காரணமாக அமைந்தது. மக்களின் பணம் கோடிக்கணக்கில் வீண் விரயம் செய்யப்பட்டது. ஆனால் நாம் நாட்டில் உள்ள அனைத்தையும் மாற்றியுள்ளோம்.இருந்தவர்களையும் மாறுமாறே கூறுகிறோம். புதிதாக மாறுங்கள்.பழைய படி இருக்க வேண்டாம்.
இதையே கூறுகிநோம்.700 இராணுவத்தினர்கள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரப்படையினர் என அனைவரையும் வைத்துக்கொண்டு இந்த நாட்டை நிர்வகிக்க முடியுமா? எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து அவர்களது பாதுகாப்பை குறைக்க நடவடிக்கை எடுப்போம்.
ஆனால் நீதிமன்றம் செல்கிறனர். மக்கள் எத்தகைய அரசியலை கோரினர்.பழைய கலாசாரம் தேவையா? நாம் அதனை மாற்றியமைப்போம். ஆனால் பழைய தலைவர்களால் மாற முடியாது உள்ளது. எமக்கு வேறு வழியில்லை.30 ஆயிரம் சதுர மீட்டர் கொண்ட வீட்டை கோருகிறார்கள்.இந்த மண்டபத்தை போன்று 6 மடங்கு. ஆனால் இருவரே உள்ளனர்.தனிமையை உணர மாட்டார்களா? இது நியாயமான விடயமா ? மற்றுமொருவர் 15 ஆயிரம் சதுர மீட்டர் வீட்டில் தனியாக வசிக்கிறார்.
எவ்வாறு அவரால் வசிக்க முடியும்? அதில் பேய்கள் இருக்கும் அல்லவா? ஜனாதிபதி அமைச்சர்கள் மக்கள் மாற்றமடையும் போது ஏன் இவர்களால் மாற்றமடைய முடியாது உள்ளது.இதனை சரி செய்ய முற்படும் போது பழிவாங்குவதாக கூறுகிறார்கள்.வீட்டிலிருந்து வெளியேற்றுவதாக கூறுகிறார்கள்.இருவரும் வாழ்வதற்கு வீடொன்று இல்லையென்றால் நாம் பொருத்தமான வீட்டை பெற்றுத் தருகிறோம்.
எனவே நாம் அவர்களை மாறுமாறே கூறுகிறோம்.அதில் பழிவாங்களோ, கோபமோ அல்லது ஆத்திரமோ இல்லை. புதிதாக மாறுங்கள்.நாம் கூறுவதற்கு முன்னதாக சென்றிருக்க வேண்டும்.ஆனால் நாம் கூறியும் செல்லமாட்டார்கள்.வழக்கு தாக்கல் செய்கிறார்கள்.அட்டையை மெத்தையின் மீது வைக்க முடியாது.அது பழைய பாதையிலேயே செல்லும் என்றார்.
(எம்.வை.எம்.சியாம்)