பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளயுயர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்க தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் தொழில் செய்து வருகிறார்கள். தனியார் தோட்டங்களில் நஷ்டமடைந்துள்ள நிறுவனங்களும் உள்ளன. இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் உள்ளன.
அதனால், ஒவ்வொரு தோட்ட நிர்வாகங்களுடனும் முதலில் தனித்தனியே பேச்சு நடத்துமாறு பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் அவர்களின் கருத்துகளைப் பெற்ற பின் பொதுக்கலந்துரையாடலுக்கு செல்ல முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.