இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் விசேட தெளிவுப்படுத்தலும் இவ்வாரம் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக சீன விஜயத்தின் போது இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், ஆய்வுக் கப்பல்கள் விவகாரம் குறித்தும் அரசாங்கம் அறிவிக்க உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இரு நாடுகளுக்கு இடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்களில் சீன - இலங்கை அரச ஊடகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் விசேடமான ஒன்றாகும்.
இதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் சீன கமினிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இலங்கையிலிருந்து கோதுமை தவிடு செதில்களை ஏற்றுமதி செய்வதற்கான சுகாதார மற்றும் தாவர சுகாதாரத் தேவைகள் குறித்து சீன மக்கள் குடியரசின் சுங்க நிர்வாகத்திற்கும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்திற்கும் இடையே ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கான ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தேவைகள் குறித்து சீன மக்கள் குடியரசின் சுங்க நிர்வாகத்திற்கும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்திற்கும் இடையே ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
சீன ஊடகக் குழுமத்திற்கும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட சீன மக்கள் குடியரசின் சின்{ஹவா செய்தி நிறுவனத்திற்கும் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கும் இடையே செய்தி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அத்துடன் சீன மக்கள் குடியரசின் சின்{ஹவா செய்தி நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்க தகவல் தினைக்களத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சீன மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் (அரிசி, மீன்பிடி வலைகள் மற்றும் வீட்டு வசதிகள்) கீழ் இலங்கைக்கு உதவிகளை ஒப்படைத்ததற்கான சான்றிதழ். சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சகத்திற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இடையில் முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பணிக்குழுவை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்கும் சீன சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு ஒத்துழைப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையில் ஒரு சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு குறித்த இணக்கப்பாடுகள், இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இலங்கை மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட 'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி மற்றும் தேசிய தொழில்நுட்ப பொருளாதார உத்திகளை கூட்டாக ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்புத் திட்டம் குறித்து சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.