இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த ரமல் சிறிவர்தன பதவி விலகியதன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ரமல் சிறிவர்தன தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.