Our Feeds


Sunday, January 5, 2025

SHAHNI RAMEES

கைதிகளை மிருகங்கள் போல் நடத்த வேண்டாம்! - சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு

 


நீண்ட இரும்புச் சங்கிலியால் கைவிலங்கிடப்பட்ட

நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்ற அறையில் வரிசையாக ஆஜர்படுத்தியதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் மீது கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த நீதவான், கைதிகளை மிருகங்கள் போல் நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சிறை அதிகாரிகள் திறந்த நீதிமன்றில் நீதவானிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.


நீதிமன்றம் விடுமுறை என்பதால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் அனைத்து வழக்குகளும் நீதிமன்ற இலக்கம் 03 இல் அழைக்கப்பட்டு, விளக்கமறியல் நீடிப்பதற்காக ஆஜர்படுத்தப்பட்ட சுமார் நாற்பது சந்தேகநபர்கள் ஒரே சங்கிலியில் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டு நீதவான் வலியுறுத்தினார். சந்தேக நபர்களை மனிதர்களைப் போல நடத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.


நீதிமன்ற இலக்கம் 03 இன் சிறைச்சாலையில் சந்தேக நபர்களின் எண்ணிக்கையை உள்வாங்க முடியாது என்பதால், சந்தேக நபர்களை ஒரே இடத்தில் கைவிலங்கிட்டு நீதிமன்ற அறையில் ஆஜர்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »