Our Feeds


Sunday, January 5, 2025

SHAHNI RAMEES

இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!

  



இலங்கையின் பிறப்பு வீதத்தில் கடந்த 11 வருடங்களில்

பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்னவின் கூற்றுப்படி, 2013 இல் 352,450 பிறப்புகள் இருந்தன, ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு நிலவரப்படி 28,091 ஆக குறைந்துள்ளது.



வருடாந்த பிறப்பு விகிதம் சுமார் 100,000 பேர் குறைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரு சமூக உரையாடலின் அவசியத்தை அத்துறையின் நிபுணரான கலாநிதி தீபால் பெரேரா வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »