முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மரணதண்டனை விதிக்கப்பட்டவருமான துமிந்தசில்வாவிற்கு எந்த காரணத்திற்காகவும் பொதுமன்னிப்பு வழங்கப்படாது என பிரதிநீதியமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
நாங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்த்து அஞ்சப்போவதில்லை - சகோதரர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டதொலைக்காட்சி அலைவரிசை குறித்து பெயரை குறிப்பிடாத அமைச்சர் அரசாங்கத்திற்கு எதிராக அது முன்னெடுத்துவரும் பிரச்சாரங்களை சுட்டுக்காட்டியுள்ளதுடன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அந்த தொலைக்காட்சி அலைவரிசை இவ்வாறு செயற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது குறித்து அரசாங்கம் உறுதியாகவுள்ளது,துமிந்தசில்வாவை மருத்துவமனையி;ல் அனுமதிக்க வேண்டுமா என தீர்மானிப்பதற்காக மருத்துவபரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Thursday, January 9, 2025
துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கப்போவதில்லை - பிரதிநீதியமைச்சர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »