அரசாங்கத்தின் வாகன இறக்குமதியால் நாட்டிற்கு
எந்தவித பயனும் இல்லை என, மலைய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் வாகன இறக்குமதி முறைமையை அரசாங்கம் மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.