நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்
இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலத்தை வழங்குவதற்காக சி.சி.டி.யில் புகாரளித்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கர்தினால் ரஞ்சித்தை அவதூறு செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவு பரப்பப்பட்டமை தொடர்பில் நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு பேராயர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.