Our Feeds


Wednesday, January 1, 2025

SHAHNI RAMEES

இணையவழி நிதி மோசடி - இலங்கையிலிருந்த படி தங்கள் நாட்டவர்களை இலக்குவைக்கும் சீன குற்றவாளி கும்பல்கள்

 

இலங்கையில் சீன பிரஜைகள் உட்பட வெளிநாட்டவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலக்குவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என்பதுதெரியவந்துள்ளது.

இலங்கை பிரஜைகள்குறைந்தளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

2024 ஒக்டோபர் முதல் இணையவழி நிதிமோசடியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 200க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டின் பல பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பெருமளவு கையடக்க தொலைபேசிகள்மடிக்கணிணிகள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசா முடிவடைந்ததும் இலங்கையில் தங்கியிருந்து இலங்கையிலிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து உன்னிப்பாக அவதானித்துவருவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதரகம் கைதுசெய்யப்பட்ட தனது பிரஜைகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

தொலைதொடர்பு உட்கட்டமைப்பில் இலங்கையில் காணப்படும் சாதகதன்மை, புவியியல் ரீதியிலான நெருக்கம் இணையவழி மோசடி தொடர்பில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வின்மை போன்றவற்றின் காரணமாக சில இலத்திரனியல் குற்றக்கும்பல்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளன என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சீனாவை சேர்ந்தவ இவர்கள் இலங்கையிலிருந்தபடி சீனாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்கள் நாட்டவர்களை இலக்குவைக்கின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »