தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸில் சில இடமாற்றங்களை மேற்கொள்ள பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டினார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக சட்டரீதியாக தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக நடத்துமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதன் பணிகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் உறுதியளித்துள்ளார்.