பாடசாலை மாணவியை கடத்திய போது பொலிஸாரால்
கைது செய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்து அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
பணம் தமக்கு திருப்பிக் கிடைக்காத காரணத்தினால் இவ்வாறான செயலைச் செய்யத் தூண்டியதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
தவுலகல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில் கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேக நபரை கைது செய்ய 05 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி, கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபரின் கையடக்க தொலைபேசி தரவுகளை ஆராய்ந்ததில், சந்தேகநபர் அம்பாறை பொலிஸ் பிரிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, சந்தேகநபரும் மாணவியும் இன்று (13) காலை அம்பாறை பஸ் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி குளிரூட்டப்பட்ட பஸ்ஸில் தங்கியிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியை வைத்தியரிடம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.