Our Feeds


Saturday, January 18, 2025

SHAHNI RAMEES

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்.

 


மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த

வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 


மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு இருந்த நான்கு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர்  உயிரிழந்தனர்.


இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு துப்பாக்கி தாரிகளின் தேற்றத்திற்கு சமமான இரண்டு படங்களை வெளியிட்டுள்ளனர்.


இந்த படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மன்னார் பொலிஸ் நிலையத்தின் 071 859 1363 அல்லது 023 222 3224 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »