மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ள அதானி நிறுவன காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
442 மில்லியன் டொலர் முதலீட்டில் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 1,500 - 2,000 வரையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.