Our Feeds


Monday, January 13, 2025

SHAHNI RAMEES

சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்தாக்குக - இலங்கை நிறுவனங்கள் கூட்டாக ஜனாதிபதியிடம் கோரிக்கை!

 


இலங்கையின் மத்திய அதிவேக வீதித்திட்டத்தின் மிகவும் தாமதமான பிரிவு 1க்குப் பொறுப்பான சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



MCC என்ற மேட்ச்லலுர்ஜிக்கல் கோப்ரேஷன் ஒவ் சீனா (Metallurgical Corporation of China (Ltd)) நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.



இந்நிலையில், திறந்த, வெளிப்படையான ஏலச் செயல்முறையின் கீழ் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோருமாறு இலங்கையின் மிகப்பெரிய ஐந்து கட்டுமான நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.



The Lanka Infrastructure Development Consortium (LIDC) PLC, Maga Engineering (Pvt) Ltd International Construction Consortium (Pvt) Ltd (ICC), KDA Weerasinghe & Co. (KDAW), kw;Wk; NEM Construction மற்றும் NEM Construction என்பனவே அந்த நிறுவனங்களாகும்.



சீன நிறுவனமான MCC உடனான ஒப்பந்தம் மிகவும் விலை உயர்ந்தது என்றும் இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



இந்நிலையில், பிரிவு 1 இன் மீதமுள்ள பணிகள் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டால் குறிப்பிடத்தக்க செலவுக் குறைப்பு இருக்கும் என்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.



குறிப்பாக சீன நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள தற்போதைய ஒப்பந்தத்தின்கீழ், ஒரு கிலோமீற்றருக்கு சுமார் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என விலை குறிக்கப்பட்டுள்ளது.



எனினும், பகுதி 2க்கு உள்ளூர் நிறுவனங்களால் ஒரு கிலோமீற்றர் ஒன்றுக்கு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே குறிக்கப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »