கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்துடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
நுகர்வோர் அதிகார சபையின் சுற்றிவளைப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருசில அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிர்ணய விலைக்கு மாறாகவே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடளித்துள்ளனர்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கட்டப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்துடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருசில பகுதிகளில் பகல் வேளையில் ஒரு விலைக்கும்இ இரவு வேளைகளில் பிறிதொரு விலைக்கும் அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடளித்துள்ளார்கள்.
ஆகவே 24 மணித்தியாலமும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Sunday, January 26, 2025
கூடிய விலைக்கு அரியை விற்றால் ஒரு இலட்சம் ரூபா தண்டம் - நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »