ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு தனக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்குவதற்காக, அரசாங்கத்திற்கு அரசு என்ற அடிப்படையில் எரிபொருளை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.