மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சில சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“அர்ஜுன மகேந்திரனை அழைப்பதற்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒரு சிங்கப்பூரர். சிங்கப்பூரில் வசிக்கிறார். எனவே, அவரை இங்கு அழைத்து வருவதில் சில சிக்கல்கள் உள்ளன. அரசுகள் எப்போதும் தங்கள் நாட்டின் குடிமக்களின் பக்கத்திலிருந்து சிந்திக்கின்றன.
எனவே இன்னும் பல உண்மைகளை எடுத்து அந்த அரசிடம் உறுதிப்படுத்த வேண்டும். அவர் அங்கு குடிமகனாக இருப்பதால், ஒரு அரசாங்கம் எப்போதுமே ஒரு பிரச்சனையை தனது குடிமகனின் பார்வையில் பார்க்கிறது. எனவே குடிமகன் அங்கே இருக்கிறான் ஆனால் குற்றவாளி இங்கே இருக்கிறான் என்பதற்கான வலுவான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
அண்மையில் சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சடன" நிகழ்ச்சியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.