இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அவர் நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது வடக்கு சமாசத்திற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கும் வைபவத்திலும் கலந்துகொண்டார்.
இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றில் அவர் கலந்துகொள்வார்.
இதேநேரம் இன்று மதியம் தெல்லிப்பழையில் நடைபெறும் தேசிய பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றுவிட்டு கொழும்பு திரும்புவார்.