புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் உள்ள தற்போதைய நெருக்கடி நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக, அவசர நடவடிக்கையாக மறு கொள்முதல் மூலம் 5,00,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய்மொழி மூலமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
"மறு கொள்முதல் மூலம் 500,000 கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமைக்குள் இது தேசிய பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்டு, 5,00,000 புதிய கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு கோரல் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Thursday, January 23, 2025
கடவுச்சீட்டு விநியோக நெருக்கடியை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »