Our Feeds


Saturday, January 25, 2025

Zameera

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஓய்வு


 நாட்டின் தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, எதிர்வரும் 29 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.


சேவை நீட்டிப்பில் உள்ள இவர் இலங்கை விமானப்படையின் 19 ஆவது தளபதியாகவும் இவர் ஜூன் 30, 2023 அன்று அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தற்போதைய அரசாங்கம் டிசம்பர் 31, 2024 இக்குப் பிறகு சேவை நீட்டிப்புகளை வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது, இதன் விளைவாக, தற்போதைய விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.


அதன்படி, விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட உள்ளார்.


தற்போது விமானப்படையின் திட்டமிடல் இயக்குநராகப் பணியாற்றும் எதிரிசிங்க, 1991 ஆம் ஆண்டு 24 ஆவது ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக விமானப்படையில் சேர்ந்தார்.  மற்றும் 1970 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த வாசு பந்து எதிரிசிங்க, கண்டி புனித சில்வெத்தாரா கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »