Our Feeds


Monday, January 20, 2025

Zameera

போலி கடவுச்சீட்டுக்களுடன் ஆப்கானிஸ்தான் பயணிகள் கைது


  

போலி கடவுச்சீட்டுக்கள் மூலம் நாட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

 

போலி கஸகஸ்தான் கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த 21 மற்றும் 23 வயதுடைய இருவர் குவைத்திலிருந்து வந்தவர்கள்.

 

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தங்கள் கடவுச்சீட்டுக்களை சமர்ப்பித்த சந்தேக நபர்கள், அவர்களின் பயண ஆவணங்களை மேலும் ஆய்வு செய்வதற்காக எல்லை கண்காணிப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

விசாரணையில் அவர்கள் போலி கடவுச்சீட்டுக்களை வைத்திருந்தது தெரியவந்தது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »